Published : 25,Jun 2017 02:02 PM

ரூ.9 கோடி.. சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா ராய்!

Aishwarya-Rai-increases-her-salary

தனது தந்தை சிரஞ்சீவியுடன் வரலாற்றுப்படமான ’உய்யலவட நரசிம்ம ரெட்டி’ படத்தில் ஜோடிபோட ஐஸ்வர்யா ராயை அணுகி இருக்கிறார் ராம் சரண். 

சிறிது இடைவேளைக்கு பிறகு மீண்டும் எண்ட்ரியான ஐஸ்வர்யா ராய் மீண்டும் வந்து ஜாஜ்பா, சரப்ஜித், உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார், அவர் நடித்த ஏ தில் ஹாய் முஸ்கி படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். 

அவர் தென்னிந்திய படங்களில் கடைசியாக நடித்த எந்திரன் படத்தில் நடிக்க ரூ.6 கோடி சம்பளம் பெற்றார். தற்போது தனது மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறும் அவர் ’உய்யலவட நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சிவியுடன் ஜோடிபோட 9 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இருப்பினும் அசராத ராம்சரண் ஐஸ்வர்யாவை இழுத்துவர முடிவு செய்து அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து விட்டாராம். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்