Published : 25,Jun 2017 10:34 AM

முதலமைச்சர் விழாவில் தினகரன், சசிகலா பேனர்

Sasikala-banner-in-TN-CM-s-function

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற போரூர் மேம்பால திறப்பு விழாவில் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. 

சசிகலா மற்றும் தினகரனை முழுவதுமாக ஒதுக்கி கட்சியின் அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருவதாகவும் அவர் தலைமையில் தனி அணி இருப்பதாகவும் பேசப்பட்டு வந்த சூழலில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை போரூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.54 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்