Published : 30,Jul 2020 02:22 PM
இன்றும் உயர்ந்த தங்கத்தின் விலை – புதிய உச்சத்தை தொட்டது..!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28 ரூபாய் உயர்ந்து 5,103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 224 ரூபாய் அதிகரித்து 40,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்தையும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தையும் சமீபத்தில் கடந்தது.