கனிமொழி எம்.பி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சிஐடி காலனியில் உள்ள தூத்துக்குடி எம்பி கனிமொழி வீட்டிற்கு தினமும் ஒரு ஏட்டு தலைமையில் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கனிமொழி வீட்டிற்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கனிமொழிக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லாததாலும், கொரோனா காலத்தில் காவல்துறையின் தேவை அதிகரித்துள்ளதாலும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கோவில்பட்டி கிளைச் சிறையில் மேலும் ஒரு விசாரணைக் கைதிக்கு உடல்நலக் குறைவு
இந்நிலையில் இது குறித்து வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் திணறும் தலைநகர் டெல்லி !
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை டிஜிபியிடம் கடந்த 23-ஆம் தேதி கனிமொழி புகார் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?