[X] Close

தொழிலாளர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்பதை யாராவது கண்காணிக்கிறார்களா?: உச்சநீதிமன்றம்

இந்தியா

Supreme-court-basic-questions-to-the-Center-on-Migrant-workers-case

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளது.


Advertisement

புலம்பெயர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “ பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டுமா என்ன..?

image
சொந்த ஊர்களுக்காக செல்ல காத்திருக்கும் நேரத்திலும், பயணத்திலும் அவர்களுக்கு உணவு வழங்குவது யார்? தொழிலாளர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்பதை யாராவது கண்காணிக்கிறார்களா..? புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இன்னும் எத்தனை நாட்கள்தான் ஆகும்..? என பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close