Published : 22,May 2020 07:57 AM
சென்னை: காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 20 பேருக்கு கொரோனா

சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் உட்பட 15 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் அங்கு கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் தாசப்பிரகாஷ் அருகே உள்ள ரயில்வே காவலர் குடியிருப்பு, அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காவலர் குடியிருப்பு, ராயபுரம் ரயில்வே காவலர் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளில் வசிக்கும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தப் பரிசோதனையில் தாசப்பிரகாஷ் குடியிருப்பில் வசித்து வந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 20 நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இது குறித்து அங்குள்ள காவலர்கள் கூறும் போது “ குடியிருப்பில் எந்த விதமான நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படததே தொற்றுக்கு காரணம்” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.