Published : 14,May 2020 10:07 AM

மகாராஷ்டிராவிலிருந்து மதுரை வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி

Corona-confirmed-for-6-people-who-came-to-Madurai-from-Maharashtra


மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மதுரை மேலூர் பகுதிக்கு வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மேலூர் பகுதிக்கு வந்த 3 நபர்களுக்கு உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது அதே பகுதியிலிருந்து மேலூருக்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

image

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களில் 2 நபர்கள் மேலூர் சாலக்கிபட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் முத்திருளாண்டிபட்டியைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கருங்காலக்குடி சேர்ந்தவர் என்பதும், மீதம் இருவர் காரைக்குப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

image

இதன் மூலம் மேலூர் பகுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்