[X] Close

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி உயிரிழப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

One-dead-for-corona-virus-in-chennai-today

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.


Advertisement

சென்னை ஓட்டேரி அடுத்த கொசப்பேட்டையை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூதாட்டிக்கு ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டதால் அதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, சென்னை வடபழனியை சேர்ந்த 70 வயது மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த மூதாட்டியின் சளியை எடுத்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனையின் முடிவிலேயே மூதாட்டிக்கு கொரோனா இருக்கிறதா அல்லது இல்லையா என்பது தெரியவரும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close