இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 4வது பொதுமுடக்கம் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 3 கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, மே 17ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கிறது. இதைத்தொடர்ந்து 4ஆம் கட்ட பொதுமுடக்கம் இருக்கும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுடனான உரையின்போது தெரிவித்தார். அத்துடன் நான்காம் கட்ட பொதுமுடக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் கூறினார். அதுமட்டுமின்றி வேறு யாரையும் நம்பி இல்லாத நாடாக இந்தியா இருக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும், 4ஆம் கட்ட பொதுமுடக்கம் விரைவில் பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அதில், இந்தியாவின் வளர்ச்சியில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி ஐந்து முக்கிய அம்சங்களை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் ஊக்கம் பெரும் எனவும் தெரிவித்தார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!