கொரோனாவக் கட்டுப்படுத்த முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே3ம் தேதி வரை 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நேற்று நீட்டிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் அளவை பொருத்து சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதிகம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால் ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்துகொள்கின்றனர். சில இடங்களில் மணமகள் அருகில் இல்லை என்பதால் வீடியோ அழைப்பு விடுக்கப்பட்டு செல்போனுக்கு தாலிகட்டும் சம்பவமும் அரங்கேறியுள்ளன. இந்நிலையில் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகன் ஒருவர் தன்னுடைய திருமணத்தை வீட்டுக்குள்ளேயே நடத்தி முடித்துவிட்டார்.
மத்தியப்பிரதேசத்தின் கவுதம்புராவில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தெரிவித்த மணமகனின் அண்ணன், என் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் எனது தம்பியின் திருமணத்தை உடனடியாக நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வீட்டிற்குள்ளேயே திருமணத்தை நடத்தி விட்டோம் எனத் தெரிவித்தார்.
பெண் மருத்துவரின் சேவையை வாழ்த்திய பிரதமர் மோடி - 6 லட்சம் லைக்ஸ் அள்ளிய வீடியோ
Loading More post
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் வருகிறது அவசர சட்டம்?
திருநெல்வேலி: ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் உயிரிழப்பு; 5 குழந்தைகள் காயம்
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?
தேர்தல் வெற்றியை காலிஸ்தான் இயக்கத்துக்கு சமர்ப்பித்த எம்.பி....! பஞ்சாபில் பரபரப்பு
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!