Published : 01,May 2020 05:54 AM
மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல்.. உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது?

மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28-ஆம் தேதி மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவே இல்லை. இதனால் சட்ட மேலவைக்குத் உறுப்பினராக தேர்வாகி உத்தவ் தாக்கரே முதல்வராகத் தொடர்வார் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக மேலவைத் தேர்தல் நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது.
முதியவர் கொலை : கூட்டாளியை வைத்து கொலை செய்துவிட்டு மகன் - மருமகள் நாடகமாடியது அம்பலம்
பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் அதாவது வரும் மே 28-க்குள் மேலவை அல்லது பேரவைக்குத் தேர்வாக முடியாத நிலையில் உத்தவ் தாக்கரேவின் முதலமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.
வெளிமாநில தொழிலாளர்கள் ஊருக்குச் செல்ல நடவடிக்கை: இணையப்பக்கம் தொடங்கும் தமிழக அரசு!
இந்நிலையில், மகாராஷ்டிராவில் சட்ட மேலவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆணையத்தின் இந்த முடிவால் முதல்வர் பதவியை இழக்கும் நிலையில் இருந்து உத்தவ் தாக்கரே தப்பித்து உள்ளார். கொரோனாவால் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.