[X] Close

சென்னையில் போலீசார் விடுமுறையில் செல்ல திடீர் தடை

No-Leave-for-Police-Until-July-19

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மாநகர காவல் துறையினருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


Advertisement

இது தொடர்பாக காவ துறை ஆணையர் அலுவலகம் சார்பில் உயர் காவல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் சட்டப்பேரவை தொடர் முடியும் நாளான ஜூலை 19-ம் தேதி வரை போலீசாருக்கு அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக விடுப்பு அளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், சந்தேக நபர்களை வழக்குப் பதியாமல் காவல் நிலைய லாக் அப்பில் வைக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் உள்ளவர்கள் மரணம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் அலுவலக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சட்டம் ஒழுங்கை பாதிக்க கூடிய அரசியல், மத, சமூக, தொழிலாளர் சம்மந்தமான பிரச்னைகள் எதுவும் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்ட காவல் துறையினருக்கும் அந்தந்த மாவட்ட காவல் நிர்வாகங்கள் சார்பில் இதே போன்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் விடுக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close