[X] Close

முதலமைச்சர் வந்து பேசும் வரை போராட்டம் தொடரும்...

Jallikkattu-Issue-Youngsters-protest-in-Tamilnadu

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கறையில் இளைஞர்‌கள் இன்று காலை முதலே போராட்டம் நடத்திவருகின்றனர். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக பதிலளிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்க வேண்டும் என, கட்சி சார்பின்றி இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கருப்பு சட்டை அணிந்துகொண்டு பீட்டாவுக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் இளைஞர்கள் முதலமைச்சர் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிடுவது இல்லை என கூறியுள்ளனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close