Published : 08,Apr 2020 11:12 AM
சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது : பிரதமர் மோடி

இக்கட்டான இந்த காலகட்டத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா நோய் தொற்றின் பாதிப்புகள் குறித்து மாநில அரசுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநில அரசுகள் தங்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, பிரதமர் தரப்பிலும் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடி பேசியவை குறித்து பிரதமர் அலுவலகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. “இக்கட்டான இந்த காலகட்டத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என அரசு செயல்படுகிறது” என்று பிரதமர் பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. தற்போதையை நிலைமை என்பது, மனிதகுல வரலாற்றில் சகாப்தத்தை மாற்றும் நிகழ்வு. அந்த தாக்கத்தை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். இந்த கொடிய நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றும் மாநில அரசுகளின் முயற்சிக்கு பாராட்டுக்கள்” என்றார்.
#LIVE | ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை - பிரதமர் மோடி https://t.co/vwk9qLZyMc
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 8, 2020
அத்தியாவசியத்திற்கு வெளியே வருவோரை கண்ணியமாக நடத்துங்கள் - டிஜிபி அறிவுறுத்தல்
இதனிடையே, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.