Published : 28,Mar 2020 03:38 PM
ஊரடங்கில் அவசரப் பயணமா ? காவல்துறையை தொடர்புக்கொள்ளலாம் !

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் அவசர காரணங்களுக்காக பயணம் செய்ய விரும்புவோர் அனுமதி பெறுவதற்கென தனிக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்.3ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்
காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குடும்பத்தில் நிகழும் இறப்பு, திருமணம் அல்லது அவசர மருத்துவ காரணங்களுக்காக முன் அனுமதி பெற்றுச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழக மாவட்டங்கள் இடையிலோ, வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் 75300 01100 என்ற அவசரகால கட்டுப்பாட்டறை எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம்: காவல்துறைக்கு தகவல் கொடுத்தவருக்கு சரமாரி உதை !
மேலும் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமும் தெரிவிக்கலாம் என்றும், gcpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தகவல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண அனுமதிச் சீட்டு கேட்பவர்கள் கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையின் சேவை அவசர தேவைகளுக்காக மட்டுமே என்றும் சாதாரண தேவைகளுக்கு அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.