வேறொருவரை திருமணம் செய்துகொண்ட தன் இளம் மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் புகார் செய்துள்ளார் 62 வயதுக்காரர்.
தானேவை சேர்ந்தவர் சதீஷ் ஆப்தே. வயது 62. இவர் 23 வயது லிசா ஆப்தேவை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்தின் போது இவர்கள் எடுத்த செல்ஃபி புகைப்படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து அவர்கள் செல்ஃபி ஜோடி என்றே அழைக்கப்பட்டனர். இது காதல் திருமணம் என்று சதீஷ் கூறியதால், ’லவ்வுக்கு வயசு ஒரு பிரச்னையே இல்லை’ என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர் அந்தப் பகுதியினர். ஆனால் யார் கண்பட்டதோ, இந்த ஜோடி இப்போது பிரிந்திருக்கிறது.
‘என் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டார். இதற்கு காரணம் என் மைத்துனி மோனிகாதான். ஏனென்றால் அவருக்கும் என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. அதோடு வீட்டில் இருந்த நகைகளையும் மோனிகா எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தானே போலீசில் புகாரில் கூறியிருக்கிறார் சதீஷ்.
இதையடுத்து லிசா பெற்றோர் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. அதில், ‘சதீஷ் பாலியல் ரீதியாக லிசாவை டார்ச்சர் செய்தார். அதோடு எங்கள் மகளை மிரட்டி திருமணம் செய்துகொண்டார்’ என கூறியிருந்தனர். இப்போது மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார் சதீஷ்.
‘லிசாவுக்கு என் மீது அதிக காதல் அதிகம். அவர் குடும்பத்துக்கு எங்கள் காதலில் விருப்பமில்லை. அதனால் அவரை குஜராத்தில் உள்ள ஒருவருக்கு ரகசியமாக திருமணம் செய்துகொடுத்துள்ளனர். லிசா இன்னும் என் மனைவிதான். நாங்கள் விவாகரத்து பெறவில்லை. அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.
விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்