Published : 11,Jun 2017 02:12 AM

தென்னாப்பிரிக்க போட்டிக்கு வித்தியாசமாகத் தயாரான விராத்!

Before-white-ball-battle--Virat-Kohli-trains-with-red-ball

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்பாக, இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்தைக் கொண்டு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முக்கியமான லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை, இந்தியா இன்று எதிர்கொள்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், இந்திய அணி களமிறங்குகிறது. போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இலங்கைக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ஸ்விங் ஆகும் பந்துகளை சமாளிப்பதற்காக புதிய உத்தி ஒன்றை கடைபிடித்தார். பொதுவாகவே ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியில் செல்லும் பந்துகளை சந்திப்பதில் சற்று திணறும் கோலி, டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற ட்யூக் பந்துகள் மூலம் பயிற்சி மேற்கொண்டார். வேகப்பந்து வீச்சில் பலமான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இந்த பயிற்சி உதவும் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் உலகில் ஒருநாள் போட்டிக்கான பயிற்சியில் வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ட்யூக் பந்துகள் மூலம் பயிற்சி மேற்கொள்வது அனேகமாக இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்