[X] Close

“சோப்பு உள்ளிட்ட தூய்மைப் பொருட்கள் 15% விலை குறைப்பு” - தயாரிப்பு நிறுவனம்

இந்தியா

-Cleaner-Products-Including-Soap-15--Price-Reduction----Products-Company-announced

 


Advertisement


200 மில்லி லிட்டர் அளவு கொண்ட கிருமி நாசினியை அதிகபட்சமாக நூறு ரூபாய்க்கு விற்க வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவிற்கு 5 நபர்கள் பலியாகி உள்ள நிலையில் 271 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரொனா பரவமால் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கைகளை கிருமி நாசினி பயன்படுத்தி அடிக்கடி கழுவுதல், ஒருவரை ஒருவர் தொடாமால் குறிப்பிட்ட இடைவெளி விட்டு இருத்தல் உள்ளிட்ட பல வழிமுறைகளை அரசு வலியுறுத்தியுள்ளது.


Advertisement

இந்தியாவில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு !

image

இந்நிலையில், சில ஆன் லைன் வணிக நிறுவனங்களில் கிருமி நாசினியின் விலை பல மடங்கு அதிகரித்திருப்பதாக பலர் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

image

அதில் “200 மில்லி லிட்டர் அளவு கொண்ட கிருமி நாசினியை அதிகபட்சமாக நூறு ரூபாய்க்கு விற்க வேண்டும் என்றும் அதேபோல, சாதாரண முகக்கவசம் ஒன்றின் விலையை பத்து ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!!

இதனிடையே சோப்பு உள்ளிட்ட தூய்மைப் பொருட்களின் விலையை 15 சதவிகிதம் வரை குறைக்கவுள்ளதாக நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதில் ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட், கோத்ரெஜ், பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் சோப்பு மற்றும் இதர தூய்மைப் பொருட்களின் விலையைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன. மேலும், இந்தப் பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாகவும் கூறியுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close