கொரோனா தொற்று பரவுவதை தடுக்க சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியக்கூடிய நடைமுறையை தொடங்கி உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள பல ஐடி நிறுவனங்களுக்கு வரும் ஊழியர்களுக்கு அலுவலக வாயிலிலேயே உடல் வெப்ப சோதனை நடத்தப்படுகிறது. ஊழியர்களின் உடல் வெப்ப நிலை சரியான அளவில் இருந்தால் மட்டுமே அவர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஊழியர்களின் உடல் வெப்பநிலையில் மாற்றம் இருப்பின் அவர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் இருந்தே பணிபுரியும் நடைமுறையை பல நிறுவனங்கள் அமல்படுத்த தொடங்கியுள்ளன.
வீட்டில் இருந்தே பணிபுரியும் நடைமுறையை பொருத்தவரை பெரிய நிறுவனங்கள் இதனை உடனடியாக மேற்கொள்வதில் சில சிரமங்கள் இருப்பதாகவும் ஸ்டார்ட் அப் மற்றும் நடுத்தர தொழில்நுட்ப நிறுவனங்கள் எளிதில் இதனை செயல்படுத்த முடியும் என்கிறார்கள் இத்துறையை சேர்ந்தவர்கள்.
ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைசெய்வதற்கு தேவையான விபிஎன் சேவையை பெறுவதற்கான நடைமுறையை மத்திய தகவல் தொடர்புத்துறை எளிமையாக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய தொடங்கி விட்டதால் தொழில்நுட்ப பூங்காக்களில் உணவு மற்றும் போக்குவரத்து சேவையை மேற்கொண்டுவரும் நிறுவனங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றன.
கொரோனா கண்காணிப்பிலிருந்து தப்பித்து விபத்தில் சிக்கிய நபர்.. உதவிய 40 பேருக்கு பாதிப்பு?
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!