Published : 10,Jun 2017 05:43 AM
வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய ரஷித் கான்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரானப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு, 212 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜாவித் அஹமதி அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான், 8.4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.
அவர் கூறும்போது, காபூல் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ஆட்ட நாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன். டி20 தொடரில் தோற்றபிறகு, இந்த வெற்றி எங்களுக்கு தேவையாக இருந்தது’ என்றார். ரஷித் கான், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.