Published : 09,Jun 2017 03:42 AM

சென்னைக்கு இன்று முதல் கல்குவாரி தண்ணீர்!

Stone-quarry-water-supplied-to-Chennai

 

கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது

கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து இன்று முதல் 3 கோடி லிட்டர் குடிநீரை சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரத்திலுள்ள 22 கல்குவாரிகளிலுள்ள நீரை பயன்படுத்த சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டது. பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டதில், அந்த நீர் குடிக்க உகந்தது என்று தெரியவந்தது. எனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் கல்குவாரி நீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக, 13 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் வடிவமைக்கப்பட்டு‌ பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாள்தோறும் 3 கோடி லிட்டர் தண்ணீரை, நூறு நாட்க‌ளுக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட கல்குவாரி நீர் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்