Published : 08,Jun 2017 01:52 PM

மகளிர் காங்கிரஸ் என்றாலே கொஞ்சம் தகராறுதான்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Former-Tamil-Nadu-Congress-leader-EKVs-Ilangovan-said-that-women-s-Congress-is-a-minor-dispute-

மகளிர் காங்கிரஸ் என்றாலே கொஞ்சம் தகராறு தான் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வருகின்ற 14ம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடர் தான் அதிமுக அரசுக்கு கடைசி கூட்டமாக இருக்கும் என தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் வருவதற்கான சூழல் உள்ளது. அதிமுக பல அணிகளாக உடைந்து காணப்படுகிறது. எனவே விரைவில் அதிமுக அரசு கவிழும் என அவர் தெரிவித்தார். டிடிவி தினகரன் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், டிடிவி தினகரன் விரைவில் நிரந்தரமாக சிறை செல்லும் நிலை உருவாகும் என்றார். சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், மகளிர் காங்கிரஸ் என்றாலே கொஞ்சம் தகராறு தான். அந்த சம்பவம் குறித்து எனக்கு முழு விவரம் தெரிந்தவுடன் கூறுகிறேன் என அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்