Published : 08,Jun 2017 01:37 PM

தவான் அசத்தல் சதம்: 321 ரன்கள் குவித்த இந்திய அணி

India-set-Srilanka-322-to-win-at-the-Champions-Trophy

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கிய ரோகித்-தவான் ஜோடி, இந்தமுறையும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 78 ரன்கள் குவித்திருந்த ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கலக்கிய யுவராஜ் சிங்கும் 7 ரன்களில் வெறியேறினார். கோலி, யுவராஜின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், தவானுடன் கைகோர்த்த தோனி அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்த ஜோடி சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், ஒருநாள் போட்டிகளில் 10ஆவது சதத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 125 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டிகளில் 62ஆவது அரை சதத்தினைப் பதிவு செய்த தோனி, 63 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்