[X] Close

சென்னை வருகிறார் ‘தல’ தோனி : ரசிகர்கள் உற்சாகம்

விளையாட்டு

MS-Dhoni-come-to-Chennai-for-IPL-Training

ஐபிஎல் போட்டியை முன்னிட்டு ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் கேப்டன் தோனி சென்னை வருகிறார்.

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ உட்பட 8 அணிகள் பங்கேற்கும் 60 போட்டிகள் கொண்ட இந்த ஐபிஎல் தொடர் மே மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது.

image


Advertisement

இந்தப் போட்டிக்கான பயிற்சியை இரு அணி வீரர்களும் விரைவில் தொடங்கவுள்ளனர். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியிலும் ஒவ்வொரு வீரராக சொந்த மண்ணான சென்னைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இன்று மாலை அம்பத்தி ராயுடு சென்னை வந்ததாக தெரிகிறது.

image

இந்நிலையில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் கேப்டன் ‘தல’ தோனி சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் தோனி வருகையை கொண்டாடி வருகின்றனர்.

காணாமல்போன 16 வயது மனைவி : புகார் அளித்து போலீஸிடம் சிக்கிய கணவர்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close