நடிகர் சிம்பு ‘மாநாடு’ படப்பிடிப்பில் பிரேம்ஜியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நடிகர் பிரேம்ஜி அமரன் கடைசியாக ஆர்.கே. நகர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் த்ரிஷா நடித்து வரும் ‘ராங்கி’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பிரேம்ஜி அவரது சகோதரர், வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.
பிரேம்ஜி, அவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 600028’, ‘கோவா’,‘மங்காத்தா’,‘பிரியாணி’ என அனைத்து படங்களிலும் தொடர்ந்து நடித்திருந்தார். இவர், தம்பிக்கு தொடர்ந்து இடமளித்து வருவது குறித்துக்கூட சில எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
கைதி ரீமேக்கா? தலைவர் 169 படமா? : எதை இயக்கப்போகிறார் லோகேஷ் கனகராஜ்?
ஆனாலும் விமர்சனங்களைக் கடந்து பிரேம்ஜி, ‘மாநாடு’ படத்தில் இணைந்தார். இதற்கானப் படப்பிடிப்பு கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. தற்போது விஜிபி கோல்டன் பீச்சில் இதற்கானப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கான செட் அமைப்புகளை கலை இயக்குநர் உமேஷ் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் ‘மாநாடு’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது சகோதரர் பிரேம்ஜியின் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்களை வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் பிரேம்ஜிக்கு நடிகர் சிம்பு கேக் ஊட்டிவிடும் காட்சிப் பதிவாகியுள்ளது.
மேலும், படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், படத்தின் முன்னணி நடிகர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்