[X] Close

பாகிஸ்தானுக்கும் பரவிய கொரோனா.. 2 பேர் பாதிப்பு

உலகம்

Pakistan-confirms-its-first-two-cases-of-coronavirus

பாகிஸ்தானில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

பாகிஸ்தானில் இதுவரை கொரோனா அறிகுறி மட்டுமே இருந்துவந்த நிலையில் தற்போது பாதிப்பு உறுதியாகியுள்‌ளது. இருவரும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் பாகிஸ்தானின் சுகாதாரத்துறை ஆலோசகர் சாஃபர் மிர்சா தெரிவித்துள்ளார்.

image


Advertisement

பாகிஸ்தானின் அண்டை நாடான ஈரானில் கொரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 139 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இஸ்லாமாபாத் - ஈரா‌னின் எல்லைப்பகுதியை பாகிஸ்தான் அரசு மூடியுள்ளது. இதனிடையே பிரான்சில் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். 60 வயது முதியவர் ஒருவர் பாரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பிரான்சில் மொத்தம் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

உலக முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 2 ஆயிரத்து 760 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 80 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக சீனாவில் 2 ஆயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

போர்க்குற்ற விசாரணை தீர்மானத்திலிருந்து விலகியது இலங்கை


Advertisement

Advertisement
[X] Close