வீட்டு வாசலிலேயே தொழிலதிபருடன் குடும்பத்தினர் கொலை: அதிர்ச்சியளிக்கும் வீடியோ

வீட்டு வாசலிலேயே தொழிலதிபருடன் குடும்பத்தினர் கொலை: அதிர்ச்சியளிக்கும் வீடியோ
வீட்டு வாசலிலேயே தொழிலதிபருடன் குடும்பத்தினர் கொலை: அதிர்ச்சியளிக்கும் வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரில் தொழிலதிபர், தனது குடும்பத்தினருடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரில் 60 வயதான தொழிலதிபர் ஜெய்ஷ்வால் மீது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அவர் வீட்டு வாசலிலேயே அவர் மீது தாக்குதல் நடத்தியது. அவர் வீட்டின் கேட் அருகே நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த அவருடைய மனைவியும், மகனும் ஓடிவந்து அந்தக் கொள்ளையர்களிடமிருந்து ஜெய்ஷ்வாலை மீட்க முயன்றனர். அப்போது கொள்ளையர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஜெய்வால், அவர் மனைவி மற்றும் மகனை சுட்டனர். மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தலைநகர் லக்னோவிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள சீதாப்பூர், நெருக்கமான மக்கள் குடியிருப்பில் இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது. தொழிலதிபர் ஜெய்ஷ்வாலின் வீட்டிலிருந்து வெறும் 400 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச டிஜிபி அபய்குமார், “இரவு 9:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொழிலதிபர் ஜெய்ஷ்வால் வைத்திருந்த பணப்பையை பிடுங்கும் முயற்சியில் அவரையும், அவர் குடும்பத்தையும் கொலை செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com