Published : 07,Jun 2017 02:34 AM

அரை இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

Champions-Trophy--England-Advances-to-Semi-Final

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து‌ அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கார்டிஃப் நகரில் நடந்த போட்டியில் 311 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பிளெங்கெட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 310 ரன்கள் எடுத்தது. அந்த அணியைச்‌ சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, கோரே ஆண்டர்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால், இங்கிலாந்து அணி அரையிறுதியை உறுதி செய்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்