ரஜினியின் 168 ஆவது படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தலைவர் 168'. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதில் நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பு பங்கேற்று நடித்து வருகின்றனர். வழக்கம்போல் இப்படம் குடும்ப சென்டிமெண்ட் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்டிமெண்ட் காட்சிகளுடன் குடும்பங்களுக்கான திரைப்படங்களை கொடுக்கும் சிவா, அதே பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்டிமெண்ட், குடும்பக்கதை என கமர்சியல் படம் என்பதால் நடிகர் ரஜினிகாந்தும் உற்சாகத்துடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தயாரிப்பு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நயன்தாரா, தலைவர் 168 படக்குழுவில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!