[X] Close

“தற்போதைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள்” - முதலமைச்சர் பழனிசாமி

தமிழ்நாடு

CM-Edappadi-Palanisamy-spoke-about-Current-time-Movies

தற்போதைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.


Advertisement

சேலம் மாவட்டம் ஆத்தூரில் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு சாதாரண மனிதர் கூட உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் என்று கூறினார்.

கடந்த காலங்களில் மிட்டா மிராசுதாரர், தொழிலதிபர் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றியவரும் எம்.ஜி.ஆர் தான் என தெரிவித்தார். ‘வாழ்ந்தவர் கோடி, வளர்ந்தவர் கோடி’ என்ற பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்றும் அறிஞர் அண்ணாவிற்கு புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர்-க்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.


Advertisement

image

அத்துடன், “இப்போது வரும் படங்களில் எம்.ஜி.ஆர் படங்களைப் போல உயிரோட்டம் இல்லை. திரைப்படங்களின் வாயிலாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் புகுத்தியர் எம்ஜிஆர். இன்றைக்கு திரைப்படங்களை பார்த்தாலே பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள்” என்றா முதல்வர் பழனிசாமி.

மேலும், “எம்ஜிஆர் மறைந்த போது இந்த கட்சி அழிந்துவிடும் என கருணாநிதி கனவு கண்டார். ஆனால், உடைந்த கட்சியை இணைத்து எம்ஜிஆரின் ஆட்சியை வழங்கினார் ஜெயலலிதா. தமிழகத்தில் அதிக காலங்கள் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக” என்றார்.


Advertisement

ரஜினி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


Advertisement

Advertisement
[X] Close