உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்று முன்னாள் மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் அடுத்த மாநில தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “கட்சி எல்லோருடைய கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கும். தமிழகத்தில் பா.ஜ.க காலம் துவங்கி விட்டது, இதற்கு உதாரணம் தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு மிக பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது” என்றார்.
அத்துடன் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், “தமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், அதன் செல்வாக்கை காட்டி இருக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னைப் பொருத்தவரை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே,ஆனாலும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டோம்” என்றார்.
Loading More post
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
செய்ததோ உதவி.. விழுந்ததோ தர்மஅடி! பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரின் பரிதாப நிலை!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி