Published : 02,Jan 2020 01:42 AM

இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை... நடைபெறுவது எப்படி?

Today-Local-Body-elections-vote-counting

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்‌பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு ‌நடந்தது.

Image result for local body election vote counting

முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவிகித வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவிகித வாக்குகளும் பதிவாகின. அனைத்து வாக்குப்பெட்டிகளும் தமிழகத்தில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை , ‌‌காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்படும். அதனைத்தொடர்ந்து ‌‌வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ‌காலை 8 மணிக்கு பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு முதலில் கொண்டு செல்லப்படும்.

image

வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 வாக்கு எண்ணுபவர்கள் பணியில் இருப்பர். இவர்கள் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரிப்பார்கள்.

4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 4 அறைகளிலும் அந்த பதவிகளுக்கான வாக்குகள் கொண்டு செல்லப்படும். அதனைத் தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வு‌கள் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்