[X] Close

130 கோடி இந்தியர்களும் இந்து சமூகத்தினர்தான்: மோகன் பகவத்

இந்தியா

RSS-regards-130-crore-population-of-India-as-Hindu-society--Mohan-Bhagwat

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்து சமூகத்தவர்தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்று நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய மோகன் பகவத், இந்தியா, பாரம்பரியமாகவே இந்துத்துவாவாதி நாடாகத்தான் இருந்து வருகிறது என்று கூறினார். நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Advertisement

இந்தியத் தாயின் மகன் ஒருவர், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், எந்தக் கடவுளை வழிபடுபவராக இருந்தாலும், அவர் இந்துதான் என்று பகவத் குறிப்பிட்டார். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய சிந்தனை என்றும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close