படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஹீரோயின் அதிதி ராவ் உயிர் தப்பினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம், ’காற்று வெளியிடை’. இதில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. இவர் இப்போது ’பூமி’ என்ற இந்திப் படத்தில் நடித்துவருகிறார். ஓமுங் குமார் இயக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக மும்பையிலுள்ள ஆர்.கே.ஸ்டூடியோவில் திருமண பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா நடன காட்சிகள் அமைத்தார். நடன கலைஞர்கள் உட்பட சுமார் 300 பேர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தனர். அப்போது மின் கசிவு காரணமாக செட்டின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இதுபற்றி படக்குழு கூறும்போது, ’நல்ல வேளையாக நாங்கள் வெளியேற்றப்பட்டோம். தீ பெரிய அளவில் பரவும் முன்பு அணைக்கப்பட்டு விட்டது. எங்களுக்கு டெட் லைன் இருந்ததால் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிவிட்டோம்’ என்றனர்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!