Published : 03,Jun 2017 03:57 AM
ஜி.வி.பிரகாஷூடன் நடிக்க இந்தி நடிகை மறுத்தாரா?

தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடித்து ஹிட்டான படம், ’100% லவ்’. சுகுமார் இயக்கி இருந்த இந்தப் படம், தமிழில் ரீமேக் ஆகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சுகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த சந்திரமவுலி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க இருக்கிறது.
இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க முதலில் இந்தி நடிகை சாயிஷாவை கேட்டார்களாம். இவர் ஜெயம் ரவி ஜோடியாக ’வனமகன்’ படத்தில் நடித்துள்ளார். அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லாவண்யா திரிபாதி நடிக்க இருக்கிறார்.