[X] Close

TopNews | கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் கனமழை எச்சரிக்கை வரை

இந்தியா

Headlines-of-the-day

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம். ஏசு பிறந்த பெத்லஹேமில் சிறப்பு வழிபாடுகள்.


Advertisement

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பதிவேட்டை புதுப்பிக்க 12ஆயிரத்து 695 கோடி ரூபாய் ஒதுக்கீடு. முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


Advertisement

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது. அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு.

 


Advertisement

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் நீடிக்கிறது போராட்டம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு. காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறைக்கு யார் காரணம்? சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விளக்கம்.

சென்னையில் சிறார் ஆபாச படத்தை கல்லூரி மாணவிகளுக்கு அனுப்பியதாக 72 வயது முதியவர் கைது. சிறார் ஆபாச படம் பார்க்கப்படுகிறதா என இணையதள மையங்களில் காவல் துறையினர் அதிரடி சோதனை.

டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


Advertisement

Advertisement
[X] Close