[X] Close

இருள்; குளிர்: தொடங்கியது காஷ்மீரின் சில்லாய் கலான் காலம்!

இந்தியா

Harshest-Winter-Phase--Chillai-Kalan--Begins-In-Kashmir

ஜம்மு காஷ்மீரில் 40 நாட்களுக்கு நிலவும் சில்லாய் கலான் எனப்படும் அதிகபட்ச குளிர்காலம் தொடங்கியது. 


Advertisement

சில்லாய் கலான் நாட்களில் குளிரில் இருந்து‌ தங்களைக் கா‌த்துக் கொள்ள தீமூட்டி பானைகளை நாடும் மக்கள் ஏராளம். ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் உறைந்து போகும் அளவுக்கு குளிர் நிலவும். மேகமூட்டத்துக்கு இடையே அவ்வப்போது மட்டுமே சூரியன் எட்டிப்பார்க்கும். இந்த சூழல் டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கி சுமார் 40 நாட்களுக்கு இருக்கும். குளிர்காலத்தில் இருள் மட்டுமே காஷ்மீரில் நிலவும் என்பதால் முன்கூட்டியே உணவு உள்ளிட்ட ‌அன்றாடத் தேவைக்கானப் பொருட்களை காஷ்மீர் மக்கள் வாங்கி இருப்பு வைத்து விடுகிறார்கள்.

 


Advertisement

இக்காலகட்டத்தில்தான் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் அதிகம் தயாராகிறது. ஃபெரான், கேங்கர், நாம்டா என்ற தரைவிரிப்புகள் மற்றும் கப்பா என்ற பாரம்பரிய கம்பளி விரிப்பும் தயாராகிறது.

ஜனவரி இறுதியில் முடியும் சில்லாய் கலானைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு சில்லாய் குர்த் என்ற பருவம் நிலவுகிறது. இந்த காலக்கட்டத்தில் அதுவரை இருந்த கடும் குளிர் குறையத் தொடங்கும்.


Advertisement

 

இது பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நீடிக்கும். இதையடுத்து சில்லாய் பச்சா என்று அழைக்கப்படும் மிதமான குளிர்காலம் தொடங்கும். அதாவது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலவும் குளிரை விட பனிப்பொழிவும் குளிரும் குறைந்து உணரப்படும். இது மார்ச் 2ஆம் தேதி வரை நிலவுகிறது. இதுவே காஷ்மீரில் குளிர்காலத்தில் கடைசி நிலையாகும்.


Advertisement

Advertisement
[X] Close