[X] Close

"சல்யூட்" காட்ரலுக்கு ரூ.8.50 கோடி, பியூஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி..!

Cottrel-goes-for-8-50-Cr--CSK-purchased-Piyush-Chawla

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் காட்ரலை ரூ.8.50 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. அதேபோல சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் நாதன் கோல்டர் நைலை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்தாண்டு பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட தமிழகத்தின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை, இந்தாண்டு ரூ.4 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.


Advertisement

Image

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிகபட்சமாக, ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸை ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடஸ் அணி. அதேபோல நட்சத்திர ஆல் ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 


Advertisement

Image result for varun chakravarthy

மேலும், ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி. அதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்சை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி. இங்கிலாந்து அணியின் இயான் மார்கனை தவிர்த்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. மேலும், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கிறிஸ் லின்னை ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
 


Advertisement

Advertisement
[X] Close