Published : 15,Jan 2017 03:27 PM

ஆஸ்திரேலிய மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் சாதித்த பாகிஸ்தான் அணி

Pakistan-end-12-year-drought-in-Australia-with-six-wicket-win-in-second-ODI

ஆஸ்திரேலிய மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளும், ஜுனைத் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் 72 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேம்ஸ் பால்க்னர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2005ம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி பெறும் முதல் வெற்றியாகும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்