[X] Close

வயது வித்தியாசமின்றி வலம் வந்த 4 ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் 

four-thousand--santa-claus-participation-rally-in-france

டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டதால் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரங்கள், வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நகரங்கள், Carols எனப்படும் இசை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் santa claus  பங்கேற்ற ஓட்டம் நடைபெற்றது. ஒலிம்பிக் மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்களை பலர் உற்சாகப்படுத்தினர். நகரின் பல்வேறு சாலைகளில் நடைபெற்ற இப்போட்டியில் 100க்கும் அதிகமான கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் பங்கேற்றனர்.


Advertisement

க்ரீஸ் தலைநகர் ஏதன்ஸில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தாத்தா ஓட்டத்தில் குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர். இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்றவர்களிடம் 12 யூரோ கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆறாவது ஆண்டாக நடைபெற்ற இந்த ஓட்டப் பந்தயத்தின் போது வசூலிக்கப்பட்ட பணம், குழந்தைகள் நலநிதிக்கு வழங்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற SANTA CLAUS ஓட்டத்தில் வயது வித்தியாசமின்றி சுமார் 4,000 பேர் பங்கேற்றனர். 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற போட்டியின் போது வசூலிக்கப்பட்ட 11 ஆயிரம் யூரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

பிரேசிலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ரியோ-டி-ஜெனிரோவின் கடற்கரை ஒட்டிய பகுதியில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடல்நீரில் எதிரொளித்த கிறிஸ்துமஸ் மரத்தின் வெளிச்‌சத்தையும், வாண வேடிக்கையின் அழகையும் அங்கு குவிந்திருந்த உள்ளூர் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் கண்டு ரசித்தனர்.

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக அசுரர்கள் போன்ற வித்தியாசமான வேடங்கள் தரித்து மக்கள் நடனமாடினர். மனக்கவலைகளை விரட்டியடிக்கும் நோக்கில் இவ்வாறு அகோ‌ர வேடம் அணிவதாக கூறப்படுகிறது. கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும், இசை வாத்தியங்களை ஒலித்தவாறும் வீதிகளில் உலா வந்த மக்கள், குழுக்களாக இணைந்து நடனமாடியும் மகிழ்ந்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close