நடுவானில் விமானம் விழுந்து நொறுங்கியதால் ஷாரூக் கான் உட்பட பலர் பலியானதாக வந்த வதந்தி ஐரோப்பிய நாடுகளில் பரபரப்பை கிளப்பியது.
ஐரோப்பிய செய்தி சேனல் ஒன்று, பிரேக்கிங் நியூஸ் என்று நேற்று ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், தனி விமானம் ஒன்றில் பாரிஸ் நகருக்கு வந்துகொண்டிருந்தார். அவருடன் அவர் உதவியாளர் உட்பட 7 பேர் இருந்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம் நடுவானில் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஷாரூக் உட்பட 7 பேரும் பலியாகிவிட்டனர்’ என்று செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு போன் செய்து இதுபற்றி விசாரித்த வண்ணம் இருந்தனர். வாட்ஸப்பில் இந்த செய்தி பரவியது.
இதையடுத்து மும்பை போலீஸ் இணை கமிஷனர் தேவன் பார்தி, இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதைக் கேள்விபட்ட ஷாரூக் தரப்பு கதறிவிட்டது. ‘ஷாரூக், பாரிஸ் செல்லவில்லை. அவர் மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறார். விமான விபத்து என்பது வதந்திதான்’ என்று ஷாரூக் கான் தரப்பில் கூறப்பட்டது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!