[X] Close

சாம்பியன்ஸ் கோப்பை: இங்கிலாந்து- பங்களாதேஷ் இன்று மோதல்

Champions-Trophy--England-to-face-Bangladesh

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இன்‌று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், ஜோ பட்லர் உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களும், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளிட்ட ஆல்ரவுண்டர்களும் அந்த அணியில் உள்ளனர். மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், ஆடில் ரஷீத் ஆகியோர் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். 

மோர்டாசா தலைமையில் களமிறங்கும் பங்களாதேஷ் அணியில் ஷகீப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், தமீம் இக்பால், இம்ரூல் கயாஸ் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ரூபல் ஹொசைன் ஆகியோரை அந்த அணி நம்பியிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான பயிற்சியாட்டங்களில் தோல்வியுற்றுள்ள போதிலும், முக்கிய ஆட்டங்களில் ஆச்சர்யங்களை நிகழ்த்தும் அணியாகவே பங்களாதேஷ் பார்க்கப்படுகிறது.‌ இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள 19 ஆட்டங்களில், 15ல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close