[X] Close

தோனியை நினைவுபடுத்திய ஹர்திக் பாண்ட்யா

Hardik-pandya-reminds-Dhoni

இந்தியா-வங்கதேசம் இடையிலான பயிற்சிப் போட்டியின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா, தோனியைப் போன்றே ஒரு ஷாட்டினை அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 


Advertisement

உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜுலை ஒன்றாம் தேதி தொடங்குகிறது. தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி, வங்கதேசத்தை 84 ரன்களில் சுருட்டி 240 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் இன்னிங்ஸை சிக்ஸர் மூலம் ஆல்ரவுண்டர் பாண்ட்யா முடித்து வைத்தார். இந்த ஷாட் தோனியின் பேவரைட்டான ஹெலிகாப்டர் ஷாட்டினை நினைவுபடுத்துவதாக அமைந்தது. வங்கதேச பந்துவீச்சை நொறுக்கிய பாண்ட்யா, 54 பந்துகளில் 80 ரன்கள் ரன்கள் குவித்தார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூன் 4ம் தேதி இந்த போட்டி நடக்கிறது.  
 


Advertisement

Advertisement
[X] Close