Published : 31,May 2017 02:48 AM

டெல்லி ஐஐடியில் பிஹெச்டி மாணவி தற்கொலை

PhD-Student-Found-Dead-In-IIT-Delhi-Campus

டெல்லி ஐஐடியில் பிஹெச்டி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஐஐடியில் பிஹெச்டி இறுதியாண்டு பயின்று வருபவர் மஞ்சுளா தேவக். வயது 27. ஐஐடி வளாகத்தில் உள்ள நாலந்தா அப்பார்மென்ட்டின்அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மஞ்சுளாவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் ஆகியிருக்கிறது. கணவர் பெயர் ரித்தீஸ் விர்ஹா. மஞ்சுளாவின் பெற்றார் மற்றும் கணவர் போபாலில் வசித்து வருகின்றனர். மஞ்சுளா தற்கொலை குறித்து அவரது கணவர் மற்றும் தந்தையிடம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மஞ்சுளா உடல் அருகில் தற்கொலை கடிதம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்