[X] Close

மாட்டிறைச்சி தடையை எதிர்த்து வழக்கு

case-filed-against-ban-on-sale-of-cattle-for-slaughter

இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காளைகள், பசு மற்றும் எருமைகள், கன்றுடன் கூடிய பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. செல்வகோமதி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவசர வழக்காக விசாரிக்கிறது. 

உணவு என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை. அதில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை என்று செல்வகோமதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close