Published : 30,May 2017 04:13 AM
'பார்’ திறந்த பெண் அமைச்சரால் பரபரப்பு

மது பார் ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் சுவாதி சிங். இவர் லக்னோவில் உள்ள பீர் விற்பனை மையத்தில், புதிய பார் ஒன்றை திறந்து வைத்தார். பாரை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அமைச்சர் சுவாதி சிங்கை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, பெண் அமைச்சரின் இந்த செயலை அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.