Published : 26,Nov 2019 03:00 PM
அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. மேலும் ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் சூறை காற்று வீச வாய்ப்புள்ளதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 7 சென்டிமீட்டர் மழையும், ராமநாதபுரத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.