Published : 27,May 2017 03:41 PM

மாடுகளைக் காப்பாற்றவே விதிமுறை மாற்றம்... மத்திய அரசு விளக்கம்

Centre-explains-new-rules-on-cow-slaughter

கொடுமைகளில் இருந்து விலங்குகளை பாதுகாக்கவே மிருக வதை தடுப்பு சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கால்நடை சந்தைகளுக்கு கொண்டுவரப்படும் விலங்களுக்கு மட்டுமே புதிய விதிகள் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.கால்நடை இறைச்சிக்கூட வர்த்தகத்தை முறைப்படுத்துவது அரசின் நோக்கம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை சந்தைகளில் விலங்குகளின் நலனை உறுதி செய்வதே விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் நோக்கம் என மத்திய அரசு கூறியுள்ளது. இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள், எருமைகள் உள்ளிட்ட விலங்களை விற்பதைத் தடை செய்து மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அரசு சார்பில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்