[X] Close

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை..!

Chennai-IIT-suicide-at-chennai

சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு M.A humanities படித்து வருகிறார். கடந்த வாரம் நடந்த உள் தேர்வில் (internal exam) மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் சென்றவர் மின் விசிறியில் தனக்குத் தானே தூக்கிட்டு இறந்துள்ளார்.


Advertisement

இதனிடையே மாணவியை, அவரின் தாய் கைப்பேசியில் இன்று அழைத்தும் எடுக்காததால், இன்று காலை சுமார் 11.30 மணியளவில் பக்கத்து அறையில் உள்ள மாணவியை கைப்பேசியில் அழைத்த பாத்திமாவின் தாய் தனது மகள் குறித்து கேட்டுள்ளார். பின்னர் பக்கத்து அறையில் சென்று பார்த்தபோது கதவு திறக்காத காரணத்தால், கதவை உடைத்து சென்று பார்த்ததில் மாணவி இறந்து கிடந்தது தெரியவந்தது.. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close