தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை சராசரியை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் மூன்றாவது வாரம் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். இந்த ஆண்டில் அக்டோபர் 15ஆம் தேதியே வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. குமரிக் கடல் பகுதியில் உருவான கியார் மற்றும் மஹா புயல்கள் நேரடியாக தமிழ்நாட்டை நெருங்காத நிலையில், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்தது.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 17 சென்டி மீட்டர் என்ற நிலையில், இந்த ஆண்டு 22 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இது இயல்பைவிட 27 சதவிகிதம் கூடுதலாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில் தேசிய அளவில் அக்டோபரில் மழை சராசரி 7 சென்டி மீட்டர் என்ற நிலையில், 11 சென்டி மீட்டர் மழை பதிவானது. இது 44 சதவிகிதம் அதிகம் என்றும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் இயல்பைவிட அதிக மழை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்